ஜெனீவாவிலிருந்தோ,
நியூயோர்க்கிலிருந்தோ, வாஷிங்டனிலிருந்தோ எந்த அழுத்தம் வந்தாலும் அதை
கையாளும் ஆற்றலுடன் தனது அரசாங்கம் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று
கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற அரச ஊழியர்களின் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். சர்வதேச ரீதியாக நாட்டின் மதிப்பை உயர்த்துவதற்காக அரச ஊழியர்களும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நாடு எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கூறிய அவர், இத்தகைய சவால்கள் புதிதல்ல எனவும் தெரிவித்தார்.
இந்நாட்டை ஓர் ஒற்றையாட்சி நாடாக்குவதற்கான அர்பணிப்பு பிரகடனப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து, பெரும் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது ஜனாதிபதி கூறினார்.
'இந்நாட்டினால் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு எதிராக ஐக்கிய சமிக்ஞையை வெளிப்படுத்த முடிந்தது. அது எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக வங்கிகள் மூடப்பட்டமை, மிக முக்கியமாக பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ள முடிந்தது. அணிசேரா கொள்கை மூலம் இவற்றை எம்மால் எதிர்கொள்ள முடிந்தது. தொடர்ந்தும் நாம் அணிசேராமல் இருப்போம். இதனால் எந்த அழுத்தத்தையும் எதிர்கொள்ள நாம் தயார் என பிரகடனப்படுத்த முடியும' என ஜனாதிபதி கூறினார்.