கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள்
முரண்பாடான கருத்துகளை தெரிவிப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தும்
நிலையில், இந்த ஆணைக்குழுவின் சிபாரிசுகள் அமுல்படுத்தப்படும் என
அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று உறுதியளித்தது.
இவ்வாணைக்குழுவின் சிபாரிகள் அமுல்படுத்தப்பட மாட்டாது என அரசாங்கம் ஒருபோதும் கூறவில்லை என வெளிவிவகார அமைச்சை கண்காணிப்பதற்குப் பொறுப்பான நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கூறினார்.
ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிரான பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த சஜின் வாஸ் குணவர்தன, இச்சிபாரிசுகளை அமுல்படுத்துவதன் முன்னேற்றத்தை சில மாதங்களில் காணக்கூடியதாக இருக்கும் என்றார்.
'நாம் எமது நிலைப்பாட்டில் முரண்படவில்லை. இச்செயன்முறையில் பல நிறுவனங்கள் தொடர்புபட்டள்ளன. இச்சிபாரிகளை நாம் அமுல்படுத்தினால் எதிர்க்கட்சியினருக்கு சுலோகம் கிடைக்காமல் போய்விடும். ஆப்போது ஐ.தே.க. அரசியல் செய்வதற்கு த.தே.கூட்டமைப்புடன் ஒட்டிக்கொண்டிருக்க நேரிடும்' என அவர் கூறினார்.
விவாதத்தில் ஈடுபட்ட த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனை அரசியல் தீர்வு காண்பதற்கு தடங்கலாக உள்ளதாக சஜின் வாஸ் குணவர்தன விமர்சித்தார்.
"அரசியல் தீர்வு காண்பதற்கு த.தே.கூட்டமைப்பு தலைவர் ஆர். சம்பந்தன் உண்மையான அக்கறையுடன் உள்ளார் என்பதை நாம் அறிவோம். எனினும் திரு பிரேமச்சந்திரன் தீவிரவாத கண்ணோட்டத்துடன் இச்செயன்முறைக்கு இடையூறு ஏற்படுத்துகிறார். அப்படி செய்ய வேண்டாம் என நான் கேட்கிறேன். நீங்கள் தமிழ் சமூகத்தை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகிறீர்கள்' என சஜின் வாஸ் குணவர்தன கூறினார்.
ஜெனீவா தீர்மானமானது நிறைவேற்றுவதற்கான கடப்பாடு இல்லாத தீர்மானம் என்ற போதிலும் அது இலங்கை அரசாங்கத்தை கவிழ்க்க விரும்பும் சர்வதேச சமூகத்தின் ஒரு பகுதியினரின் தந்திரோபாயத்தில் ஒரு முன்னோக்கிய படியாக அமையலாம். நாம் அதை அறிவோம்" என அவர் கூறினார்.