வாகன
இறக்குமதிக்கான வரி அரசாங்கத்தினால் அதிகரிக்கப்பட்டமைக்கு இலங்கை தனியார்
பஸ் உரிமையாளர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. அத்துடன் பொதுப்
போக்குவரத்து துறையை நவீனமயப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் அச்சங்கம்
கோரியுள்ளது.
கடந்தவருடம் எந்த கட்டுப்பாடும், வரி அதிகரிப்புமின்றி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன கூறினார்.
'சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஒருவர் வாகனமொன்றை வாங்குவதற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
இலங்கையில் பொதுப்போக்குவரத்து சேவை மோசமடைந்துள்ள நிலையில், மக்கள் மாற்றுவழிகளை நாட வேண்டியுள்ளது.
அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சொந்த வாகனங்களை கொண்டுவர நேரிடலாம். பொதுப்போக்குவரத்துச் சேவை பலமாக இருந்தால் இதுபோன்று ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் வீதிக்கு வரமாட்டா' என அவர் கூறினார்.
இலங்கையில் மாகாண போக்குவரத்து அமைச்சர்கள் உட்பட 11 போக்குவரத்து அமைச்சர்கள் உள்ளனர். ஆனால் பொதுப்போக்குவரத்து சேவையை முன்னேற்றுவதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை' எனவும் அவர் கூறினார்.