போராளிகளின் கை,கால்களுடன் அமெரிக்க வீரர்களின் புகைப்படம் வெளியானதால் சர்ச்சை. (படம்)



Photos Surface of U.S. Troops Posing With Dead Bodies

ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட பயங்கரவாதிகளின் உடல் பாகங்களை கையில் பிடிதபடி அமெரிக்க வீரர்கள் நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 அமெரிக்காவின் "லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்' இதழ் புதன்கிழமை இந்தப் புகைப்படங்களை வெளியிட்டது. 2010-ம் ஆண்டில் அமெரிக்க ராணுவ வீரர்களாலேயே இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு புகைப்படதில், இறந்த பயங்கரவாதியின் இரு கால்களையும் ரு ராணுவ வீரர் தலைகீழாகப் பிடிதிருப்பது போலவும், மற்றொரு புகைப்படதில் ராணுவ வீரரின் தோளில் பயங்கரவாதியின் கை இருப்பது போலவும் காணப்படுகிறது. இது போல மொதம் 18 புகைப்படங்கள் தங்கள் வசம் இருப்பதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.

 சம்பந்தப்பட்ட வீரர்கள் ஆப்கானிஸ்தானில் செயல்படும் அமெரிக்காவின் 82-வது வான் தாக்குதல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

 புகைப்படங்களைப் வெளியிட வேண்டாம் என்று பென்டகன் கேட்டுக் கொண்டதால், செய்திக்காக குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டிருப்பதாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் ஆசிரியர் தவன் மஹராஜ் கூறியுள்ளார்.

 இதனிடையே, படங்களை வெளியிட வேண்டாம் என்று நாங்கள் கோரியதை அந்த இதழ் ஏற்றுக்கொள்ளவில்லை என்று பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜார்ஜ் லிட்டில் கூறியுள்ளார்.

 புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடதுவதற்கு அமெரிக்க ராணுவம் உதரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now