தெற்காசியாவில்
இராணுவச் செலவினங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளின் வரிசையில் இலங்கை
முதலிடத்தை பெற்றுள்ளது. இந்தத் தகவலை ஸ்ரொக்கோம் அனைத்துலக சமாதான
ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த
நிறுவனம் 2011ம் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் இராணுவச்
செலவினங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட பட்டியலின்படி, இராணுவச்
செலவினங்களுக்கு அதிகம் நிதி ஒதுக்கும் தெற்காசிய நாடுகளில், பாகிஸ்தான்,
இந்தியாவை பின்தள்ளி விட்டு இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.
இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 வீதத்தை இராணுவச் செலவினங்களுக்கு பயன்படுத்தி வருகிறது.
2001ம் ஆண்டு இலங்கையின் இராணுவச் செலவினம் 11 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டது.
2010ம் ஆண்டில், இலங்கை 1403 மில்லியன் டொலரை இராணுவச் செலவுக்கு ஒதுக்கியது.
இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.4 வீதமாக இருந்தது.
2011ம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, பாகிஸ்தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 வீதத்தையும்,
இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 வீதத்தையும்,
பங்களாதேஸ்
மற்றும் நேபாளம் ஆகியன மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 வீதத்தையும்
இராணுவச் செலவுக்கு ஒதுக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.