தம்புள்ளை
ரங்கிரி ரஜமஹா விகாரையின் விகாராதிபதி இனாமலுவ தேரரை நேற்று திங்கட்கிழமை
சந்தித்த பின்னர், சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதி
அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்துக்கு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ்
ஸ்ரீலங்கா ஆகியன கண்டனம் தெரிவித்துள்ளன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொது செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒவ் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"பிரதி அமைச்சரின் குறித்த அறிக்கை முற்றிலும் தவறானதும் பிழையாக வழிநடத்துவதுவதுமாகும். தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் சில பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் சேதமாக்கப்பட்டவில்லை என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
குறித்த பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டதை ஊடகங்கள் மூலம் முழு நாடும் அறிந்தது. பள்ளிவாசல் தேசமாக்கப்பட்டமைக்கு சாட்சியான வீடியோ மற்றும் புகைப்படங்கள் யூ ரியூப் மற்றும் இணையத்தளங்களில் உள்ளன.
இந்நிலையில், பிரதி அமைச்சர் தேவையான விசாரணைகளை மேற்கொள்வதுடன் குறித்த ஆதாரங்களை பார்வையிட்டு தனது அறிக்கையை தெளிவுபடுத்துமாறும் நாம் வலியுறுத்துகின்றோம்.
இந்த உண்மை நிலையினை வெளிப்படுத்த பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தவறும் பட்சத்தில் முஸ்லிம் சமூகத்தை பலவீனப்படுத்துவதற்கான நோக்கத்துடன் அவர் செயற்படுகின்றார் என கருதும் நிலைக்கு இச்சமூகம் தள்ளப்படும்".