
பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஈட்டப்பட்ட சமாதானத்திற்கு பங்கம் ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் தீவிர முனைப்பு காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க புலம்பெயர் தமிழர்கள் முன்வர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாறாக கஸ்டப்பட்டு வென்றெடுத்த சமாதானத்தை சீர்குலைக்கும் முனைப்புக்களில் ஈடுபடக் கூடாது என அவர் தெரிவிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தனி ஈழக் கோரிக்கைகளினால் சகல இன சமூக மக்களும் நெருக்கடிகளை எதிர் நோக்கியதாகவும், கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒரே தேச மக்களாக அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தில் கணவனை இழந்த பெண் ஒருவருக்கு இராணுவத்தினர் வீடு ஒன்றை நிர்மானித்துக் கொடுத்துள்ளனர்.