
மொகாலி : முன்னாள் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் அசார் மஹ்மூத் இவர் தற்போது
இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். தற்போது
நடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியில் விளையாட
தேர்வு செய்யபட்டு இருந்தார்.ஆனால் அவருக்கு விசாகிடைப்பது தள்ளிபோய்
வந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிங்ஸ் லெவன் அணியின் கேப்டன்
கில்கிறிஸ்ட் கூறும் போது அசார் மொகமதுக்கு விசா கிடைத்து உள்ளது.விரைவில்
பஞ்சாப் அணியில் இணைந்து விளையாடுவார் என்று கூறினார்.