மீரிகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியல்வாதிகளின் தலையீடே, பல இடங்களில் வீண் விரயம் இடம்பெறுவதற்கு காரணமென பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டுகின்றார்.
தங்கள் தாய், தந்தையரின் பணத்தைப் போன்று இந்த மக்கள் பிரதிநிதிகள் விரயம் செய்வதைப் பார்த்து உண்மையில் கவலையடைவதாகவும் அவர் கூறுகின்றார்.
சில சந்தர்ப்பங்களில் அரச நிகழ்வு எனக்கூறி வாகனங்களுக்காக அதிகளவில் செலவு செய்வதோடு இருவர் செல்ல வேண்டிய வெளிநாடுகளின் கலந்துரையாடலுக்கு 20 முதல் 25 பேர் வரையில் செல்வதாக கரு ஜயசூரிய தெரிவிக்கின்றார்.
இவ்வாறு மக்களின் பணத்தை வீணாக்குவதன் ஊடாக நாடு தற்போது பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.