ந்திய குழுவின் வன்னி பிரதேசத்துக்கான விஜயம் இன்று ஆரம்பம்

இந்திய குழுவின் வன்னி பிரதேசத்துக்கான விஜயம் இன்று ஆரம்பம்இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்றக் குழு இன்று வட பகுதிக்கான விஜயத்தை ஆரம்பிக்கின்றது.

இரண்டு நாள் வடபகுதியில் இருக்கும் இக்குழு வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளது.

கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் செட்டிக்குளம் செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு மெனிக்பாம் முகாமுக்குச் சென்று அங்கு இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்ட நிலையங்களின் நிலைமைகளை ஆராயவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ரயில் பாதை வேலைகளை இக்குழு பார்வையிடவுள்ளது.

பின் முல்லைத்தீவு செல்லும் இந்தக் குழு முல்லைத்தீவில் இன்று இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளது.

முல்லைத்தீவில் இந்திய அரசின் உதவியுடன் புனரமைக்கப்பட்டு வரும் பாடசாலைகளின் செயற்பாடுகளை பார்வையிடவுள்ளதுடன் முள்ளியவளை வித்யானந்த கல்லூரிக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்குச் செல்லவுள்ள இக்குழுவினர் அங்கு நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதுடன் அந்த வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் கையளிக்கவுள்ளனர்.

பின்னர் முல்லைத்தீவு வண்ணான் வயல் பிரதேசத்தில் இந்தியாவினால் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்திய வீடமைப்புத் திட்டத்தை பார்வையிடுவதுடன், தண்ணீரூற்று தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெறும் வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இங்கு சைக்கிள்களும் கையளிக்கப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு அரசாங்க அதிபரினால் வழங்கப்படும் பகல் விருந்துபசாரத்தில் கலந்து கொள்ளும் இக்குழு இன்று மாலை யாழ்ப்பாணம் செல்லவுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now