யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களின்
உரிமைகளை பாதுகாப்பது குறித்து இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதனால் அந்த மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக அஸ்வர் எம்பி, இந்திய பாராளுமன்றக் குழுவை சந்தித்தபோது சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் இருந்து விரட்டப்பட்டு தற்போது சிங்கள மக்களுடன் வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அஸ்வர் எம்பி கூறியுள்ளார்.
இது தொடர்பில் இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.