பிரதமர்
டி.எம். ஜயரத்ன உடல்நிலை மோசமடைந்து வருவதாலும், அவருக்கு ஞாபக சக்தி
குறைந்து வருவதாலும் பிரதமர் பதவிக்கு வேறொருவரை நியமிக்க ஜனாதிபதி
திட்டமிட்டுள்ளார். எனினும்,
இதற்குப் பொருத்தமான ஒருவரைத் தெரிவுசெய்ய முடியாமல் இருப்பதால் அமைச்சரவை
மாற்றம் தொடர்ந்து பிற்போட வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி
செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும்,
பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகிய சகோதரர்கள், ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி
சில்வா ஆகியோரில் எவருக்கும் பிரதமர் பதவியை வழங்குவதில்லை என்ற
தீர்மானத்தில் ஜனாதிபதி இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பிரதமர்
பதவிக்குப் பொருத்தமான நபரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தெரிவு
செய்ய முடியாது போனால், ஸ்ரீலங்கா மக்கள் கட்சித் தலைவர் தினேஷ்
குணவர்தனவிற்கு அந்தப் பதவியை குறுகிய காலத்திற்கு வழங்கத்
தீர்மானித்துள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
அத்துடன், அடுத்த மாதமளவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யவும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார்.