மலேசியாவில்
நடைபெறும் 13வது ஆசிய பாதுகாப்பு சேவைகள் மாநாடு மற்றும் கண்காட்சியில்
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப்டினன்ட்
ஜெனரல் ஜகத் ஜயசூரிய, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்டி அபேவிக்ரம
ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மலேசியாவின்
தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் 45 நாடுகளைச் சேர்ந்த
தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் பலர்
கலந்துகொள்கின்றனர்.
மேற்கு
மற்றும் கீழத்தேய நாடுகளின் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பங்குகொண்ட
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரய மலேசிய இராணுவத்
தளபதி ஜெனரல் தத்துக்ஹாஜி சுல்கிப்ளி ஹாஜி செய்னுல் அப்டீனை சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாட்டு தளபதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற
இந்த நல்லென்ன சந்திப்பின் போது இரு தளபதிகளும் ஞாபகச் சின்னங்களை
பரிமாறிக் கொண்டதுடன் இரு தரப்பு விடயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளனர்.
இதேவேளை
இந்த மாநாட்டில் பங்குகொண்ட அவுஸ்திரேலிய இராணுவத் தளபதி லெப்டினன்ட்
ஜெனரல் டேவிட் மொரிஷனை இலங்கை இராணுவத் தளபதி சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளார்.
இலங்கைக்கு
விஜயம் செய்யுமாறும் இந்த சந்திப்பின் போது இலங்கை இராணுவத் தளபதி
அவுஸ்திரேலிய இராணுவத் தளபதிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.