சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி மும்பைக்கு
சென்றுள்ளார், காயம் காரணமாக சிகிச்சைக்கு சென்றதாக கூறப்பட்ட தகவல்களை அணி
நிர்வாகம் மறுத்துள்ளது.
ஐந்தாவது
ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், புனே
வாரியர்ஸ் அணிக்குமிடையில் கடந்த சனிக்கிழமை புனேயில் நடைபெற்ற போட்டியில்
டோனி முழுமையான உடற்தகுதியுடன் காணப்பட்டிருக்கவில்லை.
அவர்
சில தருணங்களில் நடப்பதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மும்பையை நோக்கி தனது மனைவியுடன்
பயணமாகியுள்ளார். அவர் வைத்தியரை பார்ப்பதற்காக மும்பைக்குச் சென்றுள்ளதாக
தகவல்கள் வெளியாகியிருந்தன.
மேலும், அடுத்த மூன்று அல்லது நான்கு போட்டிகளில் டோனியால் விளையாட முடியாது போகலாம் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அணி
நிர்வாகிகளிடம் தொடக்கத்தில் கேட்கப்பட்டபோது, டோனி மும்பை சென்றுள்ளது
உண்மைதான், ஆனால் அவர் சிகிச்சைக்காக செல்லவில்லை, அவரது நண்பர்
திருமணத்துக்காக சென்றுள்ளார் என்று கூறினர்.
சென்னை
சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அவருக்குக் காயமெதுவும் ஏற்பட்டிருக்கவில்லை
என நேரடியாக மறுத்திருக்காததன் காரணமாக டோனிக்குக் காயம்
ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அதிகமாயிருந்தது.
எனினும்
மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக கருத்து வெளியிட்ட அணி
நிர்வாகியொருவர், டோனிக்கு எந்தவித காயங்களும் கிடையாது என உறுதிப்படக்
கூறியுள்ளார்.
ka.