
வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் செய்து வைத்திருந்த வலையில் நேற்று (14) இரவு குறித்த முதலை அகப்பட்டுள்ளதாக கமநலசேவை மற்றும் வன விலங்கு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
வட மாலிம்பட பகுதியில் செய்து வைக்கப்பட்டிருந்த வலையில் குறித்த முதலை மாட்டியுள்ளது.
12 அடி நீளமுடைய இந்த முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி கடந்த ஒரு மாதத்தில் இரு உயிர்கள் காவு கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.