பல்
சமுதாயத்தவர்களும், நிம்மதியாகவும் சுபீட்சத்துடனும் வாழ்ந்து வரும்
இலங்கை நாட்டில் கடந்த 20 வருடங்களாக யுத்த மேகம் சூழ்ந்திருந்து தற்போது
தீவிரவாதம் இல்லாதொழிக்கப்பட்டிருக்கும் இவ்வேலையில், நாட்டு மக்களிடையே
பிரிவினையை உண்டாக்க நினைக்கும் சில கயவர்கள் இப்போது முஸ்லீம்களை சீண்ட
ஆரம்பித்துள்ளார்கள்.
அதன் சில கட்டங்களாக
அதன் சில கட்டங்களாக
- குர்பானுக்கு மாடடுப்பதைத் தடுக்க வேண்டும் என்ற காவிகளின் கோஷம்.
- தேசிய அடையாள அட்டைக்கு முஸ்லீம்கள் தொப்பி போடக் கூடாது.
- பள்ளிகளில் பாங்கு சொல்லும் போது ஒலிபெருக்கியைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்.
போன்ற காவிச் சிந்தனைகள் கடந்த காலங்களில் இலங்கையில் அரச மட்டத்தில் முன் வைக்கப்பட்டது. அல்லாஹ்வின் அருளால் அவை தோற்கடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தான் இப்போது பள்ளிகளைக் குறி வைக்க ஆரம்பித்துள்ளார்கள் இந்த காவிப் பயங்கரவாதிகள். ஜெனீவாவில் நாட்டுக்கு உதவி தேவை என்ற போது முஸ்லீம்களிடம் முழு நாடும் கையேந்திய நேரம் முஸ்லீம் நாடுகள் தான் இலங்கைக்கு கரம் கொடுத்துதவின.
ஆனால் உதவியவர்களுக்கே உபத்திரவம் செய்யும் நடவடிக்கையில் இன்று இவர்கள் ஈடுபட ஆரம்பித்துள்ளார்கள்.
தம்புள்ளையில் பள்ளியை உடைத்த காவிக் காடையர்களுக்கு எதிராக கடந்த 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பில் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடை பெற்றது.
இலங்கை வரலாற்றில் தனியொரு இஸ்லாமிய அமைப்பு ஆண்கள், பெண்கள் அனைவரையும் ஒன்று கூட்டி தலை நகரில் நடத்திய முதலாவது போராட்டமாக இது காணப்படுகின்றது.
ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் இருந்து ஆரம்பித்த பேரணி சுமார் 05 கிலோ மீட்டர்கள் வரை சென்று இறுதியில் கொழும்பு மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்துடன் நிறைவு பெற்றது.
பள்ளியை உடைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ் மற்றும் சிங்கள மொழியில் பதாதைகளை சுமந்தவர்களாக கோஷங்களை எழுப்பியவாறு ஜமாத்தின் தேசிய நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கிணங்க மிகவும் அமைதியாகவும், நேர்த்தியாகவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊடகவியலாளர்கள் சூழ நடை பெற்ற இப்போராட்டம் பல பத்திரிக்கைகளிலும் செய்தியாக இடம் பிடித்தது. ஜமாத்தின் தேசிய தலைவர் சகோதரர் ஆர்.எம். ரியாழ் போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார். போராட்டத்தின் கண்டன உரையை தமிழ் மொழியில் அழைப்பு மாத இதழின் ஆசிரியர் சகோதரர் பர்சார் அவர்களும், சிங்கள மொழியில் ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்து ராசிக் அவர்களும் நிகழ்த்தினார்கள்.