முரண்பாட்டுக்குள் முரண்பாடு - ஜம்மிய்யதுல் உலமாவுக்குள் பிளவு.

முரன்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இலங்கை முஸ்லீம்களின் அபிலாசைகளை வென்றெடுக்கப் போகிறோம் என்று உலமாக்களுக்கான தனியாக சபையென்றும் மார்க்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தாம் தீர்ப்புத் தருவோம் என்றும் உருவாக்கப்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை இன்று வரை ஆளும் அரசாங்கத்தின் அடிமை சபையாகவே இருந்து வருகின்றது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்களுக்குக் கூட இவர்களால் இலங்கை முஸ்லீம்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை.

அரசாங்க நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், அரசியல் வாதிகளுக்காக பாத்திஹா ஓதி துஆ கேட்பதும் தான் இவர்களின் பணியாக இருந்து வந்தது, வருகின்றது. இறுதியாக இவ்வமைப்பின் தலைவர் ரிஸ்வி இங்கைப் பிரச்சினை தொடர்பாக ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இலங்கைக்கு ஆதரவு திரட்டும் முகமாக ஜெனிவாவுக்கு சென்றார் ரிஸ்வி.

ஜெனிவாவுக்கு சென்ற மரியாதையை காப்பாற்ற வேண்டும் என்ற அரசாங்கம் மீதான அலாதியான இவரின் பாசம் தம்புள்ளை பள்ளி விஷயத்தில் இவரின் சிந்தனைக்கு இடம் கொடுக்க மறுத்துவிட்டது. பள்ளியை இடித்தவர்களுக்கு எதிராக போராட்டம் நடத்த முற்பட்ட முஸ்லீம்களுக்கு இவர் சொல்லிய அறிவுரை (?) நோன்பு பிடித்து துஆ கேளுங்கள் என்பதுதான். போராட்டம் நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

தம்புள்ளைப் பள்ளிக்கு ஏற்பட்ட நிலை இவருடைய குடும்பத்திற்கு ஏற்பட்டால் இவர் போலிஸ் நிலையத்தை நாடுவாரா நோன்பு பிடிப்பாரா?

இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் பாவிகளை அவன் கண்டிப்பாக தண்டிப்பான். இதே நேரம் நமது உரிமையை வென்றெடுக்க நாம் பாதிக்கப்படும் போது களத்தில் இறங்க வேண்டாமா? அரசாங்கத்திற்கு கூஜா தூக்குவதுதான் நமது பணியா?

பிளவுக்கான காரணம்.

இப்படி தம்புள்ளைப் பள்ளி விஷயத்தில் அரசாங்கத்திற்கும் பௌத்த பிக்குகளுக்கும் ஆதரவான நிலையை அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை எடுத்த காரணத்தினால். இவ்விஷயத்தில் அதிருப்தி அடைந்தவர்களே இலங்கை ஜம்மிய்யதுல் உலமா  சபை என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

எது எப்படியிருந்தாலும் இவர்களிடமிருந்தும் மக்களுக்கு   எந்த நலவும் நடக்கப் போவதில்லை. கண்டிப்பாக இவர்களும் பாத்திஹா தான் ஓதப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பொருத்திருந்து பார்ப்போம்.

முரண்பாட்டுக்குள் முரண்பாடு தோன்றியுள்ளது.

லங்கா நவ் ஆசிரியர் குழு 
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now