
இஸ்லாமிய மதப்பிரிவுகளுக்கு இடையிலான நெருக்கம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றின் போது அவர் பிரதமர் டி.எம்.ஜயரட்னவை சந்தித்திருந்தார்.
இதன்போது, இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான மதம், மற்றும் சகோதர ரீதியான உறவுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் பள்ளிவாசல் அமைவிடம் தொடர்பாக எழுந்துள்ள அசாதாரண நிலை குறித்து ஆராயுமாறும், பொதுமக்கள் மத்தியில் நல்லுறவை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அயதுல்லா வலியுறுத்தியுள்ளார்.