யுத்தகாலத்தில்
நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமது காணிகளைப் பறிகொடுத்த
உரிமையாளர்கள் அவற்றை மீண்டும் பெற்றுக்கொள்ளும் விதத்திலான சட்டத்தை
விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்தில் அவுஸ்திரேலிய தூதுவர் ரொபின் மூடியுடன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இத்தகவலை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் நீதித்துறையில் இந்நாட்டுக்கே உரிய தனித்துவமான அம்சங்களும் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் நீதிமன்ற நடைமுறைக்கு புறம்பாக பிணக்குகளுக்கு இணக்கத் தீர்வைக் காண்பதில் தமது அமைச்சின் கீழ் செயல்பட்டு வரும் மத்தியஸ்த சபைகள் அளப்பரிய பங்களிப்பைச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.