இலங்கையின் அயன அயல் ஒடுங்கல் வலையத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்
தற்போது நாட்டைவிட்டு அகன்று செல்வதாக வானிலை அவதான நிலையம்
தெரிவித்துள்ளது.
ஆனால் காலநிலை மாற்றம் இலங்கையில் தொடர்ந்தும் காணப்படுவதால் இன்று 24ம் திகதியும் நாட்டின் பல பாகங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
காலை வேலையில் கரையோரப் பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம் எனவும் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளை சற்று சுழல் காற்றையும் எதிர்பார்க்க முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் அதிகரித்துச் செல்வதால் பொது மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும் என வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.