அமைச்சர் மேர்வின் சில்வாவின் நடவடிக்கையால், தற்போது இடம்பெற்று வரும் களனி பிரதேச சபையின் அமர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது அமைச்சர் மேர்வின் சில்வா, களனி பிரதேச சபையின் முத்திரை மற்றும் உத்தியோகபூர்வ கடிதத்தாள் என்பவற்றை பயன்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இம்முறை மே தினத்திற்கு அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

