இலங்கை அகதிகளின் 13 நாள் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது

செங்கல்பட்டு முகாம் இலங்கை அகதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 13 நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட அகதிகள் நேற்று ஞாயிற்றுக் கிழமை தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

கியூ பிரிவு பொலிஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகள் 32 பேர் செங்கல்பட்டு முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர். தங்களை விடுவித்து திறந்தவெளி முகாமிற்கு மாற்ற வேண்டும்.

குடும்பத்துடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும் என வலியுறுத்தி இவர்களில் 10 பேர் ஏப்ரல் 16-ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இவர்களுக்கு ஆதரவாக மேலும் 7 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 17 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களில் 11 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டனர்.

அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கியூ பிரிவு டி.எஸ்.பி. பாண்டியன், செங்கல்பட்டு இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர், செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, வட்டாட்சியர் வெங்கடேசன், துணை வட்டாட்சியர் தனசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் வரும் ஜூன் மாதம் சீனியாரிட்டி அடைப்படையில் 15 பேரும், பிறகு அடுத்த கட்டமாக மற்றவர்களை விடுவிப்பதற்கும் ஏற்படுகள் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு அதிகாரிகள் குளிர்பானம் கொடுத்து போராட்டத்தை முடித்து வைத்தனர்.

இதே போல் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட 11 பேருக்கும் வட்டாட்சியர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் இளநீர் கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்தனர்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now