வெளிநாடுகளிலிருந்து
இலங்கைக்குத் திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன்
ஒப்பிடும்போது இவ்வருட முதற் காலாண்டு பகுதியில் குறைவடைந்திருந்ததாக
அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொழும்பு
–தூத்துக்குடி கப்பல் சேவை, இடைநிறுத்தப்பட்டமையும் இதற்கு பகுதியளவில்
காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்ருட முதற் காலாண்டு பகுதியில் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் 408 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளதாக அவ்வமைப்பின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் இதே காலப்பகுதியில் 597 பேர் நாடு திரும்பியிருந்தனர்.
"இந்த எண்ணிக்கை குறைவடைந்தமைக்கு சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் கொழும்பு – தூத்துக்குடி கப்பல் சேவை கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து இடை நிறுத்தப்பட்டமையும் இதற்கு காரணமாக இருக்கலாம். கடல்வழியாக நாடு திரும்புவதற்கு தாம் விரும்புவதாகவும் இதன்மூலம் தமது வீட்டுப் பாவனைப்பொருட்களை அதிககளில் தம்முடன்கொண்டு செல்ல முடியும் எனவும் அகதிகள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்' என அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கான பிரதிநிதி மைக்கல் ஸவாக் அறிக்கையொன்றல் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மொத்தமாக அவ்வமைப்பின் உதவியுடன் 1728 அகதிகள், இலங்கைக்குக்கு திரும்பினர்.
தமிழ் நாட்டில் கடந்தவருட டிசெம்பர் மாத புளளி விபரங்களின்படி 112 முகாம்களில் 68049 இலங்கை அகதிகள் இருந்தனர். அத்துடன் 32467 பேர் முகாம்களுக்கு வெளியே வசித்தனர்.