இந்தியாவில் 15 வயதுக்கு முன்பு பாலியல் உறவு வைக்கும் பெண்கள். ஆய்வில் அதிர்ச்சி தகவல்


Indian girls having sex within 15 years.இந்தியாவில் 15 வயதுக்கு முன்பு ஆண்களைவிட பெண்களே அதிகமாக உறவுவைத்துக் கொள்கின்றனர் என்பது கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 8 சதவீதம் பெண்கள் 15 வயதுக்கு முன்னரே பாலியல் உறவு கொண்டுள்ளனர். ஆனால் அதே வயதில் ஆண்களில் 3 சதவீதம்பேரே உறவுகொண்டுள்ளனர்.

கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 வயதுக்கு முன்பு 17 சதவீதம் பெண்கள் உறவு வைத்துக் கொள்கின்றனர். இந்தியாவும் படிப்படியாக அந்த நிலையை நோக்கி முன்னேறி வருவதை யுனிசெப் கணக்கெடுப்பு தெரிவி்க்கிறது.

இதுபோல குறிப்பிட்ட வயதுக்கு முன்னரே உறவுகொள்வது எச்ஐவி நோய்த்தொற்றை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவில் தாயான 1000 பெண்களில் 45 பெண்கள் 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களாக உள்ளனர்.

2010-ம் ஆண்டில் 10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 49 ஆயிரம் சிறுவர்களுக்கும், 46 ஆயிரம் சிறுமிகளுக்கும் எச்ஐவி நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக யுனிசெப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now