புனே
வாரியர்ஸ் அணிக்கும், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கும் இடையிலான
போட்டியை கண்டுகளிக்க இந்தியாவின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்
வருகை புரிந்தார்.
கடந்த வருடம் முதன் முதலாக உருவாக்கப்பட்ட புனே வாரியர்ஸ் அணியின்
தலைவராக நியமிக்கப்பட்ட யுவராஜ் சிங், இவ்வாண்டு புற்றுநோயால்
பாதிக்கப்பட்டதன் காரணமாக ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது.
அதன் காரணமாக புனே வாரியர்ஸ் அணியின் தலைவராக சௌரவ் கங்குலி செயற்பட்டு
வருகிறார்.
அமெரிக்காவில் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர்
இந்தியாவுக்குத் திரும்பிய யுவராஜ் சிங், பொதுமக்கள் மத்தியில் தோன்றும்
இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்தது.
யுவராஜ் சிங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இத்தொடர் முழுவதிலும்
பங்கேற்க முடியாமல் போன போதிலும், இப்பருவகாலத்தில் யுவராஜ் சிங் கலந்து
கொண்டிருந்தால் அவருக்குக் கிடைக்க வேண்டிய முழு ஊதியத் தொகையும் யுவராஜ்
சிங்கிற்கு வழங்கப்படும் என புனே வாரியர்ஸ் அணியின் உரிமையாளரும், சஹாரா
நிறுவனத்தில் உரிமையாளருமான சுப்ரட்டா ரோய் அறிவித்திருந்தார்.