தம்புள்ளை பள்ளிவாசல் உடைப்பு சம்பவத்தைக் கண்டித்து அம்பாறை மாவட்ட
அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து
ஏற்பாடு செய்த ஹர்த்தால் இன்று (2012.04.26) அம்பாறை மாவட்டத்திலுள்ள
அனைத்து முஸ்லிம் பிரதேசங்களிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மாவட்டத்தில் பொது போக்குவரத்து சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை முஸ்லிம் பிரதேசங்களை அண்டியுள்ள தமிழ் வர்த்தகர்களும் தமது
வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர். பாடசாலைகள், அரச அலுவலகங்கள், வங்கிகள்
என்பனவும் இயங்கவில்லை. நகர் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டமும் வெகுவாக
குறைந்து காணப்படுகின்றது.
பொலிஸாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.