மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன காரியாலயக் கட்டிடம் இனந்தெரியாதோரினால்
இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.சம்மேளன அலுவலக கட்டிடத்தின்
முன் கதவு தீயினால் கருகியதுடன், ஜன்னல் கதவுகள் உடைத்து
சேதமாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களும் இராணுவத்தினரும் தீயை கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.