தன் வினை தன்னைச்சுடும் என்பார்களே அது இதுதானோ: ஒரு பெண்ணுக்கு நேர்ந்த கதி

காதலரின் உதவியுடன் தனது கணவரை கொலை செய்வதற்கு பெண்ணொருவர் நியமித்ததாக கூறப்படும் குழுவினால் அப்பெண் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து 60 கிலோமீற்றர் தொலைவிலுள்ள போல்பா எனும் இடத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

39 வயதான பெண்ணொருவரே இவ்வாறு வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். இப்பெண்ணின் காதலரான ஸிகோ பல் அல்லது பொட்லா என்பவர் இப்பெண்ணைவிட 14 வயது இளமையான செல்வந்த விவசாயி எனவும் ஏற்கெனவே திருமணம் செய்தவர் ஆவார்.

இச்சம்பவம் குறித்து பொலிஸ் நிலையத்தில் கண்ணீருடன்  விபரித்த பொட்லா, தனது காதலி வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கு கடுமையாக முயற்சித்தாக கூறினார். எனினும்  அக்குழுவினர் தன்னை கட்டிப்போட்டுவிட்டு அப்பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கியதாக அவர் கூறினார்.

நான்கு பேர் கொண்ட இக்கொலைக் குழுவினர் பல நகரங்களிலிருந்து  பொட்லாவினால் தெரிவுசெய்யப்பட்டனர். 

மேற்படி கொலையின் பின்னர் இப்பெண் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டமை தெரியவந்தது. எனினும் அவர் வல்லுறவு தொடர்பாக புகார் தெரிவிக்க தயக்கம் காட்டியமை குறித்து பொலிஸார் சந்தேகம் கொண்டனர்.

ஆனால் கிராமவாசிகளிடம் அப்பெண்ணின் 14 வயதான மகன் இவ்வல்லுறவு குறித்து தெரிவித்துள்ளார். கிராமவாசிகளின் வற்புறுத்தலின் பேரில் அவர் பின்னர் வல்லுறவு குறித்த முறைப்பாட்டை செய்தார்.

தற்போது பொட்லாவும் அப்பெண்ணும் இக்குற்றத்தை புரிந்ததை ஒப்புகொண்டுள்ளதுடன் கொலையாளிகள் சகிதம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மார்ச் 28 ஆம் திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணின் கணவர் கிருஷ்ண சந்திரா  செல்வந்த உருளைக்கிழங்கு வர்த்தகர் ஆவர். இவர் கழிவறைக்கு செல்வதற்கு முயன்றபோது வாசலில் வைத்து கொலையாளிகளால் வெட்டி கொல்லப்பட்டார்.

இது கொள்ளை முயற்சி சம்பவம் போல் தோற்றமளிக்கச் செய்வதற்காக மேற்படி பெண்ணையும் அவரின் மகனையும் அடைத்துவைத்துவிட்டு, வீட்டிலுள்ள பொருட்களை தாறுமாராக்கினர். ஆனால் அங்கிருந்து வெளியேறுவதற்குமுன் அப்பெண்ணை வல்லுறவுக்குள்ளாக்கினர்.

கொலையாளிகளுக்கு தானே கிருஷ்ண சந்திராவின் வீட்டை காட்டினார் என்பதையும் சம்பவத்தின்போது அந்த இடத்தில் இருந்தார் என் பொட்லா ஒப்புகொண்டுள்ளார். எனினும் அவர் தனக்கும் அப்பெண்ணுக்கும் உள்ள தொடர்பை கொலையாளிகளிடம் கூறவில்லை. தனது காதலியை அக்குழுவினர் வல்லுறவுக்குள்ளாக்க தீர்மானித்தபோது அவர் பெரும் அதிர்ச்சியடைந்தார். அதை நிறுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அப்பெண்ணின் மகன் குஷால்தான் தப்பிச் சென்று அயலவர்களுக்கு இச்சம்பவம் குறித்து அறிவித்தார்.

இப்பெண் அளித்த முரண்பாடான வாக்குமூலங்கள் தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறுவதைவிட பல விடயங்கள் இச்சம்பவத்தில் உள்ள என ஊகித்தாகவும பொலிஸார்  தெரிவித்தனர்.

'கைது செய்யப்பட்ட கொலையாளிகளை விசாரித்தபோது, அவர்கள் பொட்லாவினால் நியமிக்கப்பட்டவர்கள் என்பதை தெரிவித்தனர். அதன்பின் இச்சதி தெளிவாகியது.

தொடர் விசாரணைகளின் பின் அழத் தொடங்கிய மேற்படி பெண் இச்சம்பவத்தில் தனக்குள்ள தொடர்பை ஒப்புக்கொண்டார்' என பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now