லிபிய
தலைவர் கேணல் கடாபி மற்றும் ஈராக் தலைவர் சதாம் ஹுசைன் போன்றவர்கள் சென்ற
பாதையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கமும் செல்கின்றது. எனவே
மாற்றத்தை நோக்கிய பயணத்திற்கு பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று
ஜே.வி.பி தெரிவித்துள்ளது.வெள்ளை வான் கலாசாரம் சட்டத்தின் பாதியாகி விட்டது.
நாட்டின்
அனைத்து துறைகளுமே படுமோசமான முறையில் வீழ்ச்சிக் கண்டுள்ளது. நிதி
நெருக்கடி மேலோங்கி சர்வதேச நாணய நிதியத்திடம் நாட்டை அடகு வைக்கும்
நிலைக்கு அரசாங்கம் விழுந்துள்ளது.
தொடர்ந்தும் வரியில் வாழ மக்கள் மீது பாரிய சுமைகளை அரசு சுமத்தி வருகின்றது என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
பத்தரமுல்லையில்
அமைந்துள்.ள ஜே.வி.பி,யின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
விசேட செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.