பல லட்ச்ச கணக்கான வீடியோக்களை உள்ளடக்கிய யூடியுப் தளத்தில் இருந்து
வீடியோக்களை பிளாக்கர் பதிவுகளில் பகிர்கிறோம். வாசகர்களுக்கு முழு
வீடியோவையும் பகிராமல் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எப்படி பகிர்வது என
பார்ப்போம். இதனால் வாசகர்கள் முழு நீள வீடியோவையும் பார்த்து நேரத்தை
செலவழிக்க வேண்டியதில்லை. உதாரனத்திற்க்கு கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.
முதலில் இருந்து ஆரம்பிக்காமல் குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஓட
தொடங்கும்.
சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை காப்பி செய்து பிளாக்கர் போஸ்ட் எடிட்டரில் Edit HTML மோடில் பகிரவும்.
சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embeded கோடிங்கை காப்பி செய்து பிளாக்கர் போஸ்ட் எடிட்டரில் Edit HTML மோடில் பகிரவும்.
நீங்கள் காப்பி செய்த embeded வீடியோவின் URL மேலே காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளே ஆகா வேண்டிய நேரத்தை கொடுக்கவும்.
உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வேண்டுமென்றால் #t=1m7s என்று கொடுக்க வேண்டும். Embeded கோடிங் URL கீழே இருப்பதை போல இருக்க வேண்டும்.
http://www.youtube.com/embed/j345npmPah0?rel=0#t=1m7s
உங்களுடைய கோடிங் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்த பின்னர் பப்ளிஷ் செய்து
விடுங்கள். வாசகர்கள் உங்கள் பதிவில் உள்ள வீடியோவில் Play பட்டனை
அழுத்தியவுடன் நீங்கள் குறிப்பிட்ட அந்த பகுதியில் இருந்து வீடியோ ஓட
தொடங்கும். வாசகர்களும் எந்த சிரமுமின்றி அந்த பகுதியை மட்டும் பார்த்து
கொள்ளலாம்.
இந்த பதிவு பிடித்து இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.