கட்டாரில்
வாழும் இலங்கை முஸ்லிம்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்
நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இச்சந்திப்பு, எதிர்வரும் 19ஆம் திகதி டோஹாவிலுள்ள பனார் கேட்போர்
கூடத்தில் கட்டார் நேரப்படி பிற்பகல் 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது என
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் கட்டாரிலிருந்து தமிழ்மிரர்
இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
சமகால அரசியல், இலங்கையில் முஸ்லிம்களின் நிலை, கட்டாரில் தொழில் புரியும்
இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள்
தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது என அவர்
குறிப்பிட்டார்.
இச்சந்திப்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் நாடாளுமன்ற உறுப்பினர்
பைசால் காசீம், மாகாண கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்,
அமைச்சரின் இணைப்பு செயலாளர் எம்.சல்மான் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.