தென் கொரியாவில் உள்ள சிறைச் சாலை ஒன்றிற்கு சோதனை முயற்சியாக உலகில் முதல் இயந்திர மனித சிறைக்காவலன் உருவாக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பிற்காக இந்த இயந்திர மனிதன் சுற்றி வரும் வேகம் ஒரு மனிதனின் நடை வேகத்திற்கு சமமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை ipad மூலமாக கட்டுப்படுத்தக்குடியதாகவும், ஆபத்தான நிலையில் கைதிகளுடன் தொடர்பை மேற்கொள்ளக்சுடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மின்கலத்தின் மின்சக்தி குறையும் பட்சத்தில் அதற்கான சிறைச்சாலையில் அங்காங்கே அமைக்கப்பட்டுள்ள மீன்நூட்டி நிலையங்களுடன் தானாகவே இணைத்துக்கொண்டு மின்சக்தியை சேகரித்துக்கொள்கின்றது.


