பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைக்கும்
வர்த்தகர்களை இனங்காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
கூட்டடுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
நுகர்வோர் அதிகார சபை விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடிய விலையில் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படும் எனவும் கூட்டடுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

