போக்குவரத்து நெரிசலை குறைத்தல், எரிபொருள்
இறக்குமதிக்கான செலவை குறைத்தல் மற்றும் வாகன இறக்குமதியை கடுப்படுத்தும்
நோக்குடனேயே அரசாங்கம் வாகனங்களுக்காகன வரியை உயர்த்தியுள்ளதாக பதில்
ஊடகத்துறை பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளளார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

