
தென்னிந்தியாவில்
நிறுவப்பட்டுள்ள அணுமின் நிலையத்தால், ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்
இல்கையின் வடக்குப் பகுதிகளே அதிகளவில் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன
என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்குப் பகுதியில் கதிர்வீச்சை அளவிடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான கரையோரப் பகுதிகளிலே இந்தப் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும்,
கதிர்வீச்சின் அடிப்படை அளவை கண்டறிவதும், அதனை அடிப்படையாக வைத்து
உள்ளூர் அதிகாரிகள் மூலம் தொடர்ச்சியாக கதிர்வீச்சு அளவை கண்காணிப்பதற்குமே
இந்த அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக
இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதன்மூலம், கதிர்வீச்சின் அளவில்
ஏதேனும் மாற்றம் தென்பட்டால் இலகுவாக அடையாளம் காண முடியும்.
கதிர்வீச்சின் அடிப்படை அளவீட்டுப் பணிகள் ஒரு ஆண்டில் முடிவடையும் என்றும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் நகரில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ள கூடங்குளத்தில் இந்த அணுமின் நிலையம் அமைந்துள்ளது.