
இந்தியாவுக்கு அணுமின் நிலையம் அமைக்கும் உரிமை உள்ளது. அதை நாங்கள்
மதிக்கிறோம். ஆனால், அவற்றால் இலங்கைக்கு கதிர்வீச்சு ஆபத்து நேரலாம்
என்பதால் கவலை அடைந்திருக்கிறோம். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே கடிதம்
எழுதி இருக்கிறோம். ஷெர்னோபில் (உக்ரைன்), புகுஷிமா (ஜப்பான்) ஆகிய
இடங்களில் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட பேரிடர்களைத் தொடர்ந்தே நாங்கள்
கவலை கொண்டுள்ளோம். பாதுகாப்பு வாக்குறுதியை நாங்கள் நாடுகிறோம்.
தமிழ்நாட்டின் தென் கடலோரம் அமைந்துள்ள குறைந்தபட்சம் 3 அணு
மின்நிலையங்கள் இலங்கையில் இருந்து ஒரு குறுகிய கடல் பகுதியால்தான்
பிரிந்துள்ளன என்று இலங்கை எரிசக்தித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே இந்தியா, இலங்கை இடையே பரஸ்பர உடன்படிக்கை செய்துகொள்ளலாம் என
சர்வதேச அணுசக்தி முகமை கூறி உள்ளது. வெளியுறவு துறை அமைச்சகம் மூலமாக
இந்தியாவுக்கு நாங்கள் இது தொடர்பாக ஒரு திட்ட முன்வடிவை அனுப்பி உள்ளோம்.
இது தொடர்பாக இந்தியாவும் ஒரு பதில் குறிப்பை அனுப்பி உள்ளது. விரிவான
பேச்சு நடத்தலாம் என இந்தியா கூறி உள்ளது. ஆனால் பேரிடர் தணிப்பு திட்ட
உடன்படிக்கை செய்துகொள்வதற்காக விவாதிக்க வேண்டும் என்பதுதான்
இலங்கையின்
நிலை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கூடங்குளம் அணுமின் நிலையம், இலங்கையின் மன்னார் நகருக்கு 250 கி.மீ. தொலைவில் உள்ளது.