பின்லேடனுக்கு
அடுத்ததாக அமெரிக்காவின் எரிச்சல் ஹபீஸ் சயீதின்மேல் திரும்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு மீண்டும் போட்டியிட விரும்பியுள்ள ஒபாமாவுக்கு
இந்தமுறை உருப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இல்லை என்பதால்
தீவிரவாத அச்சுருத்தல் பூச்சாண்டி காட்டி வாக்குகளை அள்ளத்
திட்டமிட்டுள்ளார்.
எனவே அமெரிக்கா சயீதின் தலைக்கு ரூ.50 கோடி பரிசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அல்-ஜஸீரா செய்திக்கு அளித்த சிறப்பு பேட்டியில் "அமெரிக்காவுக்கு என்னைப்பற்றி கொஞ்சம்கூட அறிவில்லாமல் இருக்கவேண்டும் அல்லது இந்தியா கொடுக்கும் தவறான தகவல்டிப்படையில் முடிவெடுத்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் மிகவும் வெறுப்படைந்திருக்க வேண்டும்" என்றார்.
மேலும்இகூறுகையில் கடந்த நவம்பரில் நேட்டோவுக்கான விநியோகத்தை தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியானதையடுத்து அமெரிக்கா இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்கிறார் சயீத்.
"என் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு நானொன்றும் குகைகளில் தலைமறைவாக வாழ்ந்து விடவில்லை. நேட்டோ படைகளுக்கு வழங்கப்படும் சப்ளை மற்றும் ராக்கெட் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுதும் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் அமெரிக்கா என்மீது வெறுப்படைந்துள்ளது என்று கருதுகிறேன்" என்று அல் ஜஸீரா அவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சயீத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணையில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இவருக்குத் தொடர்பு இருக்கக்கூடும் என்று இந்தியா அறிவித்துள்ளதால் அமெரிக்கா அவரது தலைக்கு விலை வைத்துள்ளது இந்தியா இதை வரவேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.