மும்பையில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதியான ஹபிஸ் சயீத்
தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதற்கு போட்டியாக
இங்கிலாந்தில் வசிக்கும் பாகிஸ்தான் வம்சாவளியான அகமது என்பவர் ஒரு
பரபரப்பான தகவலை வெளியிட்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, முன்னாள்
ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஆகியோரை பிடித்து கொடுத்தால் ரூ.80 கோடி (10
மில்லியன் பவுண்ட்) பரிசு தொகை வழங்குவேன் என அறிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், சயீத் தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி
பரிசு தொகை அறிவித்து இருப்பதால் நானும் இந்த ரூ.80 கோடி பரிசை
அறிவிக்கிறேன் என்று கூறினார். இவர் இங்கிலாந்தில் வசிக்கும் கோடீசுவரர்
ஆவார்.
முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். இந்த பரிசு தொகை
அறிவிப்பை தொடர்ந்து கோடீசுவரர் அகமதுவை கட்சியில் இருந்து நீக்கதொழிலாளர்
கட்சி நடவடிக்கை எடுத்தது.
அகமதுவின் செயல் கண்டனத்துக்குரியது. இது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
அதுவரையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார் என
கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறினார்.