சிறிலங்கா மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான
விசாரணைகள் இடைநடுவில் கைவிடப்படக்கூடுமென சிங்கள இணையமொன்று இன்று செய்தி
வெளியிட்டுள்ளது. பெயர் வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர் இந்த தகவலை
வெளியிட்டுள்ளார் என அது குறிப்பிட்டுள்ளது. மேர்வின் சில்வாவிற்கு எதிரான
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய
செயற்குழு ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி வருகின்றது.
|
கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உறுப்பினர்கள் விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டுமென முயற்சித்த போதிலும், சில தரப்பினர் விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சரும் அவரது சகாக்களும் கப்பம் கோரல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக களனி பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். |
கப்பம் கோரல் குற்றச்சாடடு - மேர்வினுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகளில் தளர்வு நிலை!
Labels:
அரசியல்