

2009 ஆம் ஆண்டு லாஹூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முதன்முறையாக இவ்வாறான கிரிக்கெட் விஜயம் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணி மீதான தாக்குதலை அடுத்து, வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கு மறுப்பு தெரிவித்து வந்தன.
இதனையடுத்து பாகிஸ்தானில் நடைபெறவிருந்த, கடந்த ஆண்டு உலகக் கிண்ண போட்டிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றும், இரண்டு சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இந்த போட்டிகள் இந்தமாத இறுதியில் நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்புத் திட்டங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவனத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை கோரியுள்ளது.
இதனிடையே பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனம் மற்றும் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் நிறுவன தலைவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

