டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் தலைவர் குமார் சங்கக்காரவிற்கு 20,000 அமெரிக்க டொலர்கள் அபாராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் டெக்கான் அணி மெதுவாக ஓவர்களை வீசியதன் காரணமாகவே அணித்தலைவரான சங்கக்காரவிற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பூனே வொரியர்ஸ் அணிக்கெதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் குமார் சங்கக்கார தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஒரு ஓவர் தாமதமாகப் பந்துவீசியதன் காரணமாகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது ஏற்பட்ட தடங்கல்கள், தாமதங்கள் ஆகியன எல்லாவற்றையும் கருத்திற்கொண்ட போதிலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணி ஒரு ஓவர் தாமதாகக் காணப்பட்டதாலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பருவகாலத்தின் முதலாவது மெதுவான பந்துவீச்சுக் குற்றம் என்பதால் மிகக்குறைந்த அபராதமான 20,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் விதிக்கப்பட்டதாக ஐ.பி.எல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி பூனே வொரியர்ஸ் அணி 18 ஓட்டங்களால் தோற்கடித்து இந்தப் பருவகாலத்தில் அவர்களது முதலாவது வெற்றியைப் பதிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.