தபால் மூலம் வந்த போதைப் பொருள் தொகை குறித்து இலங்கை சுங்கம் மற்றும்
பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து விரிவான விசாரணைகளை
ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு பெண் ஒருவரின் பெயரிட்டு வந்திருந்த மூன்று பொதிகளில் ஒன்றை நேற்று (18) பரிசோதித்தபோது அதில் வெளிநாட்டு சஞ்சிகை இருந்ததாகவும் அதனுள் ஹசீஸ் என்ற போதப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் ஒருவரின் பெயருக்கு வெளிநாட்டில் இருந்து வந்த இந்த கடிதத்தை பெற்றுக் கொள்ள கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வெள்ளைக்கார வெளிநாட்டவர் ஒருவர் சென்றுள்ளார்.
தன்னை பிரித்தானிய பிரஜை எனக் கூறிய அவர் தனது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறியதால் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.