தென்னாபிரிக்க
மற்றும் ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஐந்து நாள் சர்வதேச 20க்கு 20
கிரிக்கெட் போட்டிகள் சிலவேளை ஒளிபரப்பப்பட மாட்டாது என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளை ஒளிபரப்ப அதிக செலவீனம் ஏற்படுவதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஸிம்பாப்வே கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச 20 க்கு 20 கிரிக்கெட் தொடரின்
முதலாவது போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி ஹராரேயில் நடைபெறவுள்ளது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய ஸிம்பாப்வே இந்தத் தொடரை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைய ஸிம்பாப்வே இந்தத் தொடரை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.