காந்திஜி ரத்தம் படிந்த புல்,கண்ணாடி,ராட்டை ஆகியவை லண்டனில் ஏலம் விடப்பட்டது.


                 Mahatma Gandhi's blood-stained soil and glasses go on auction in London

காந்திஜியின் ஒரு துளி ரத்தம் படிந்த புல், மண் ஆகியவை ரூ.8.2 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன.

 1948-ம் ஆண்டில் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டபோது, அந்த இடத்தில் இருந்து இவை சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இவற்றைப் போலவே, காந்திஜி பயன்படுத்திய கண்ணாடி, ராட்டை போன்றவையும் எதிர்பார்த்ததைவிட இரண்டு மடங்கு விலைக்கு ஏலம் கேட்கப்பட்டன. இறுதியில் கண்ணாடி ரூ.28 லட்சத்துக்கும், ராட்டை ரூ.21 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டன.

 ரத்தம் தோய்ந்த மண்ணும் புல்லும் கண்ணாடியிலான மேல்புறத்தைக் கொண்ட ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்கான கடிதமும் அதில் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பொருள்களை ஏலத்தில் வாங்கியவர்களைப் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.

 ஏலம் விடப்பட்ட கண்ணாடி, 1890-ம் ஆண்டு வாக்கில் காந்திஜி லண்டன் வந்தபோது வாங்கியதாகும். காந்திஜி எழுதிய கடிதங்கள், ஆன்மிகத் தகவல்கள் அடங்கிய அந்தக் கால இசைத் தட்டு, பிற ஆவணங்கள் போன்றவையும் ஏலம் விடப்பட்டன. லண்டனைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான முல்லாக், இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்திருந்தது. காந்திஜியின் பொருள்கள் ஏலம் விடப்படுவது குறித்து இந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டபோது, பல்வேறு தரப்பிலிருந்து அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது குறிப்பிடத்தக்கது
Share this post :
 
Support : Creating Website | Team Lanka Now | Intelligent
Copyright © 2011. Lanka Now - All Rights Reserved
Template Created by Creating Website Published by Intelligent
Proudly powered by Team lanka Now