வவுனியா
செட்டிக்குளத்தில் அமைந்துள்ள மெனிக்பாம் இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச்
சென்று பார்வையிடுவதற்கும் அங்குள்ள மக்களைச் சந்திப்பதற்கும் இந்திய
நாடாளுமன்றக் குழுவினரிடம் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இத்தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று மாலை உறுதி செய்துள்ளது.
முன்னதாக
இலங்கை அரசின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில்
இடம்பெயர்ந்தோர் முகாம்களைச் சென்று பார்வையிடும் ஏற்பாடுகள் ஏதும்
செய்யப்பட்டிருக்கவில்லை. இதுகுறித்து சுட்டிக்காட்டியே அதிமுகவும்,
திமுகவும் இந்தக் குழுவில் இருந்து விலகிக் கொண்டன.
இந்தநிலையில், இடம்பெயர்ந்த மக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற குழுவினர் கோரியிருந்தனர்.
இதையடுத்து,
இந்திய வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசுக்கு கொடுத்த அழுத்தங்களை அடுத்து,
மெனிக்பாமில் இடம்பெயர்ந்தோரைச் சந்திக்கவும் புளியங்குளத்தில் உள்ள
மீள்குடியேற்றக் கிராமத்துக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
எனினும்,
போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்தியக் குழுவினரை
அழைத்துச் செல்வதை இலங்கை அரசு தவிர்த்தே வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.