ஐ.பி.எல்
போட்டியில் புனே வாரியர்ஸ் அணியில் விளையாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள்
வீரர் மார்லான் சாமுவேல்ஸ் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் சந்தேகம்
எழுப்பியுள்ளனர்.
புனேவில்
கடந்த 14ம் திகதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தின்
போது அவர் சில பந்துகளை வீசிய முறை கிரிக்கெட் விதிமுறைகளுக்கு புறம்பாக
இருந்ததாக கள நடுவர்கள் அலீம்தார், புரூஸ் ஆக்ஸன்போர்டு, மூன்றாவது நடுவர்
வினீத் குல்கர்னி ஆகியோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இனிவரும்
போட்டிகளில் அவர் இதுபோன்ற தவறுகளை செய்யும்பட்சத்தில் ஐ.பி.எல்
விதிமுறைப்படி எஞ்சிய போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்கு தடை விதிக்கப்படும்
என்று ஐ.பி.எல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாமுவேல்ஸின்
பந்துவீச்சில் கடந்த சில நாள்களாகவே சந்தேகம் எழுந்தது. சுழற்பந்து
வீச்சாளரான சாமுவேல்ஸ், மும்பை வீரர் சூர்யகுமாரை போல்டாக்கிய போது
வேகப்பந்து வீச்சை கையாள்வது தெரிந்தது.
சென்னை
சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்திலும் ஒரு ஓவரை 122 கி.மீ வேகத்தில்
அவர் வீசினார். இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்களான பிரவீண் குமார்,
வினய் குமார் போன்ற வீரர்களே 122 கி.மீ. வேகத்தில் தான் பந்துவீசி
வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.