தான் இலஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி அளித்ததாக
அபாண்டமாகக் குற்றம் சாட்டுபவர்கள் மீது இடி விழும் என்று சாபமிட்டுள்ளார்
இலங்கையின் காணி அமைச்சர்.
இவ்வாறு சாபமிடப்பட்டவர் ரன்கிரி தம்புள்ள விஹாரையின் பீடாதிபதி இனாமலுவே ஸ்ரீ சுமங்கல தேரரே. குறித்த தேரர், அமைச்சர் இலஞ்சம் வாங்கிக் கொண்டு தம்புள்ள பிரதேசத்தில் பள்ளிவாசல் அமைப்பதற்கு அனுமதியளித்திருந்தார் என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே, இலங்கையின் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இவ்வாறு சாபமிட்டுள்ளார்.
குறித்த பள்ளிவாசலை இடிக்குமாறு அண்மைக்காலமாக தம்புள்ளையில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு சுமங்கல தேரர் தலைமை தாங்கி வருகின்றார்.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது என அமைச்சர் ஜனக பண்டாரதென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
சுமங்கல தேரரின் குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவோருக்கு இடி விழும் என அமைச்சர் சாபம் விடுத்துள்ளார்