தம்புள்ள பள்ளிவாசல் இடிக்கப்பட்டால் பதவி விலக நேரிடும் என மேல் மாகாண
ஆளுனர் அலவி மௌலானா தெரிவித்துள்ளார். அதிகாரிகள் பள்ளிவாசலை இடிக்கும்
திட்டத்தை முன்னெடுத்தால் தமது ஆளுனர் பதவியை துறக்கத் தயார் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
|
எந்தவொரு நிலையிலும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்ளார். பள்ளிவாசல் இடம் நகர்த்தப்படுகின்றமை ஆரோக்கியமானதாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1960ம் ஆண்டு முதல் குறித்த பள்ளிவாசல் இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். |
தம்புள்ள பள்ளிவாசல் இடிக்கப்பட்டால் ஆளுனர் பதவியை துறக்கத் தயாராம் : அலவி மௌலானா
Labels:
அரசியல்