பாகிஸ்தானின் சிந்து மகாணத்தைச் சேர்ந்த 18 வயது ரிங்கிள் குமாரி என்ற பெண் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு ஃபர்யால் என பெயரை மாற்றி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் ரிங்கிள் குமாரி என்ற அந்த இந்துப் பெண்ணைக் கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததோடு அவரது விருப்பத்துக்கு மாறாக திருமணமும் செய்து வைத்துள்ளதாகவும்இ தங்களது செய்தித்தாள்களின் பரபரப்பான விற்பனைக்காக பத்திரிக்கைகள் தங்களது இஷடத்திற்கு கடந்த வாரம் எழுதித்தள்ளின.
ரிங்கிள் குமாரி என்ற பெண்ணோடு லதா குமாரி என்ற பெண்ணையும் இப்படி கட்டாய மதமாற்றம் செய்துவிட்டதாகவும் ”பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கட்டாய மதமாற்றம் அதிகரிப்பு” என்ற தலைப்பிட்டு நம்ம ஊர் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டனர். அது மட்டுமல்லாமல்இ அந்த அப்பாவி இந்துப் பெண்களை மீட்டு காப்பாற்றி அவர்களது தாய் மதத்திலேயே அவர்களை இணைக்க வேண்டும் என்றும் பல நாடுகளிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருவதாகவும் பில்டப்புகளையும் விடுவதற்கு இந்தப் பத்திரிக்கைகள் தவறவில்லை.
யார் ஒருவரையும் மிரட்டிஇ தங்களது மிரட்டலுக்குப் பணியவைத்து ஒரு சித்தாந்தத்தைக் கடைபிடிக்க வைக்க முடியுமா? அது அறிவுப்பூர்வமாக சாத்தியமாகுமா? என்ற ஒரு அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. இவர்களுக்குச் செருப்படி கொடுத்தது போல அமைந்தது கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட இந்துப் பெண்களாகிய ரிங்கிள் குமாரி மற்றும் லதா குமாரி ஆகியோர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்டில் அளித்த வாக்குமூலம்.
அது குறித்து வெளியான செய்தி இதோ :
”விரும்பித் தான் மதம் மாறினோம்” பாகிஸ்தான் கோர்ட்டில் பெண்கள் விளக்கம்:
பாகிஸ்தானில் இந்துப் பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு ஆளாகின்றனர் என்றஇ குற்றச்சாட்டுகள் வெளியாகி வரும் நிலையில் பாக். கோர்ட்டில் ஆஜரான ஓர் இந்துப் பெண்"தான் விரும்பித் தான் மதம் மாறியதாக' வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சமீபத்தில் பல இந்துப் பெண்கள் இஸ்லாம் மதத்திற்குஇ கட்டாயமாக மாற்றப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. அவர்களில் மூன்று பேரை நேரில் ஆஜர்படுத்தும்படி பாக். சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் மூன்று பெண்களில் ஒருவரான லதா குமாரி என்பவர்இ நேற்று கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தான் விரும்பியே மதம் மாறியதாகவும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவரை மணம் புரிந்ததாகவும்இ வாக்குமூலம் அளித்தார். தன்னைக் கடத்தியதாக தன் கணவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு ஆதாரமில்லாதது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து இவ்வழக்கில் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என குமாரியின் கணவருக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். லதா குமாரியைப் போலஇ கட்டாயமாக மதம் மாற்றப்பட்டதாகக் கூறப்பட்ட ரிங்கிள் குமாரி என்ற இளம் பெண்ணும் நேற்று முன்தினம் சிந்து ஐகோர்ட்டில் ஆஜராகி தான் விரும்பியே மதம் மாறியதாகத் தெரிவித்தார்.
அது போல பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு முஸ்லிம் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார் என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெயர் பார்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. மதமாற்றத்துக்குப் பிறகு ஆயிஷா என அவருக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளையும் பத்திரிக்கைகள் வெளியிட்டன.
பாகிஸ்தானின் லியாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் இதுபோல நடப்பது இது 18-வது முறையாகும். மதமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறுமிகள் அச்சுறுத்தப்படுவார்கள் என்றும் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.
கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் பார்தி என்ற இந்துப் பெண்ணிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது நான் அபிது என்ற இஸ்லாமியரை விரும்பினேன். மார்க்கெட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தேன். அங்கிருந்து நாங்கள் ஓடிப்போகத் திட்டமிட்டோம் என்று சொல்லி இவ்வாறு பொய்ப் புகார் அளித்த அனைவரது முகத்திலும் கரியைப் பூசினார்.
உண்மை நிலை இவ்வாறிருக்க இஸ்லாத்தின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் திட்டமிட்டு மீடியாக்கள் இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தை செய்து வருகின்றார்கள். அதே நேரத்தில் பாகிஸ்தானில் அனுமார் கோவில் கட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதே! அதைப் பாராட்டியும் கோயில் கட்ட பாகிஸ்தான் அரசு உதவி செய்ததௌ குறித்தும் பாகிஸ்தானில் மதச் சார்பின்மை பேணப்படுகின்றது என்று இவர்கள் பாராட்டி எழுதினார்களா?
அதே நேரத்தில் பாபர் மசூதி விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பு சொன்ன நீதிமன்றத்தை விமர்சித்து கருத்து சொன்னார்களா இந்த மீடியாக்கள்?
மீடியாக்கள் இத்தகைய பாரபட்சமான போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பத்திரிக்கை துறை மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இரண்டு பேர் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது பாகிஸ்தானில் மட்டுமின்றி அதை விட பண்மடங்கு அதிகமாக இந்தியாவில் நடக்கிறது. இதைக் கூட மதத்துவேஷமாக மாற்றி இப்படியெல்லாம் மதம் மாற்றம் செய்கின்றார்கள் என்று இந்தச் செய்திகளை படிப்பவர்கள் உள்ளத்தில் நஞ்சூட்டும் இத்தகைய கேவலத்தனத்தை பத்திரிக்கைகள் மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் பாகிஸ்தானின் லியாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் இதுபோல நடப்பது இது 18-வது முறையாகும் என்று எழுதி பீதியையும் கிளப்புகின்றார்கள். அந்தப் பகுதியில் 18 பேர் காதல் வயப்பட்டு ஓடிப்போனதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் என்ன செய்யும்? இந்த ஒரு அடிப்படை உண்மைகூட விளங்காமல் இவர்கள் செய்தி வெளியிடுகின்றார்கள் என்றால் இந்த நாடு எப்படி உருப்படும்? இனியாவது இவர்கள் தங்களது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
மாற்றிக் கொள்வார்களா?