தமது
உயிர்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு களனி பிரதேச சபையின் ஆளும் கட்சி
உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக அந்தப் பிரதேச
சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதியிடம் நாளை
திங்கட்கிழமை எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் ஊடகங்கள்
சிலவற்றிடம் நேற்று தெரிவித்திருந்தார்.
அத்துடன், ஆளும் கட்சியின் தொகுதி
அமைப்பாளர், அமைச்சர் மேர்வின் சில்வாவின் அநீதியான செயற்பாடுகள் குறித்து
பொலிஸாரிடமிருந்து சட்டத்தை எதிர்பார்க்க முடியாது எனவும், தனது வீட்டின்
மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும்
அதற்கெதிராக பொலிஸார் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் பிரதேச
சபையின் உபதலைவர் சமில துமிந்த தெரிவித்திருந்தார்.
களனி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட
உறுப்பினர்கள், பாதுகாப்புச் செயலாளரின் வழிகாட்டல்களின்படியே
செயற்பட்டுவருவதாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமை நினைவூட்டத்தக்கது.
இதனால், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும், அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கும் இடையே அண்மைக்காலமாக பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.